ஞாயிறு, 17 ஜனவரி, 2016

Ashtakarma Training

அஷ்டகர்ம பயிற்சி,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதவும் பயிற்சி அளிக்கபடும்.இதன் மூலம் கணவன் மனைவி வசியம்,காதலர் வசியம்,தொழில் வசியம்,முறையற்ற உறவை பிரிக்க,கெட்ட சகவாச நண்பர்களை பிரிக்க, சூதாட்டத்தில் வெல்ல,கடன் தொல்லை நீங்க,கணபதி,முருகர்,ஹனுமார்,யட்சினி,மோகினி,காளி போன்ற தெய்வங்கள் வசியம் செய்து அதன் மூலம் நமது காரியங்களை சாதிக்கலாம்.யந்திரம்,தாயத்து,புல்லுருவி மூலிகை,வசிய மை,குறி சொல்ல உதவும் மை கிடைக்கும்.பயிற்சிகள் தபால் மூலம் அளிக்கபடும்.கட்டணம்  Rs.5200 மட்டும்.
ஸ்ரீ காலபைரவர் பீடம்,தாரமங்கலம், சேலம்

8015262015

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

Vasiyam ,Maanthreegam,Lovers Vasiyam

ஆண் பெண் வசியம்,காதலர் வசியம்,குடும்ப தொல்லை நீக்க  ,தெய்வ சக்திகள் பெற,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதும் முறை,மாந்திரீகம்,தாந்த்ரீகம்,பரிகாரங்கள் , தன வசிய முறை,சொத்து பிரச்சனை,எதிரி தொல்லை நீங்க,பில்லி சூனியம் விலகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இடம் :சென்னை பல்லாவரம் .நாள் :11.10.2015.காலை  9 முதல்  மாலை 5 வரை.கட்டணம் Rs 4000 மட்டும்.மதிய உணவு,தேநீர் ,கையேடு,பேனா வழங்கப்படும். முன்பதிவுக்கு :8015262015.

     ஸ்ரீகாலபைரவர்பீடம்,,சேலம்.

ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள்! தென்குடித்திட்டை




அதிசயம் ஒன்று:
அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும்
மழை வெள்ளமெனகொட்டியது. உயிரினங்கள் அழிந் தன. ஆனால், அவ்வளவு வெள்ளப்பெருக்கிலும், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம் அங்கு இறையருள் இருந் தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை எனும் திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.
அதிசயம் இரண்டு:
பரம்பொருள் ஒன்றே. பலவல்ல! சத்தியம் ஒன்றே இரண்டல்ல!! என்பது வேதவாக்கு அப்பரம்பொருள் தன்னிலிருந்து ஒரு பகுதியை சக்தியைப் பிரித்து உமாதேவியைப் படைத்தார். திட்டை திருத் தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்த ருளி அருள்பாலிக்கி றார்.
அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர் கள் தங்கள் ராசியின்கீழ் நின்று அம்மனைப் பிரார்த்திக்கும்போது அம்மன் அவர்கள்தோஷம் நீங்க அருளுகின்றார். பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடை, மாங்கல்யதோஷம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகை எனப்புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.
அதிசயம் மூன்று:
பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உமையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப்பரிபாலன ம் செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தனர். ஆனால் மாயைவயப்பட்டிருந்தமும் மூர்த்திகளும் பெருவெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ்ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக் கண்டு பயந்தனர்.
அலைந்து திரிந்து பெருவெள்ளத்தின் நடுவில் பெரு ந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். மாயை நீங்க வேண்டி இறைவனைத்தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத்தை ப்போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்துதோன்றிய மந்திர ஒலிகள் மும்மூர்த்திகளையும் அமைதியடைச் செய்தது.
பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறை வன் அவர்களுக்கு காட்சி தந்தார். மும்மூர்த்தி களின் மாயையை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய 3 தொழில்களையு ம் செய்ய உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார். மும்மூர்த்திக ளும் வழிபட்டு வரம்பெற்றது மூன்றாவது அதிசயம்.
அதிசயம் நான்கு:
மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில்சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்துகொண்டேவந்த சந்திரபகவான், திங்களூர் வந்து கைலாச நாதரை, வணங்கி தவம் இருந்தார்.
கைலாசநாதரும், சந்திரனின் சாபம்நீக்கி மூன்றாம்பிறையாக தன் சிரசில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவபெரு மானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடனை செலுத்துகிறார். எப்படி என் றால் இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிரு ந்து ஈரப்பத்தை ஈர்த்து ஒரு நாழி கைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேக ம் செய்கிறார்.
24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை இறை வன்மீது ஒருசொட்டுநீர் விழுவதைஇன்றும் காணலா ம். உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது. இந்த ஆலயத்தில் அமைந்து ள்ள நான்காவது அதிசயம் இது.
அதிசயம் ஐந்து:
நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலய த்தின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குலகுரு வான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார்.

எனவே, இது பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் தனித் தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து லிங்கங்கள் அமைந் திருப்பது ஐந்தாவது அதிசயம்.
அதிசயம் ஆறு:
எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர் த்தியே பெரிதும் வழிப்பட ப்பட்டு வரம்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம். ஆனால் திட் டைத்தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருக ன், குரு, பைரவர் ஆகிய ஆறுபேரும் தனித்தனி யே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழி படப்பட்டு தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். எனவே, பரி வார தேவதைகளைப்போல அல்லாமல் மூலவர்களைப்போலவே, அருள் பாலிப்பது ஆறாவது அதிசயம்.
அதிசயம் ஏழு:
பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினா ல் உருவாக்கப்பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரிய வில்லை. எனவே இது ஏழாவது அதிசயம் என்றால் மிகையாகாது.
அதிசயம் எட்டு:
பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்றும் தோஷம் நீங்கப் பெறவில்லை. இதனால் திட்டைக்கு வந்து வசி ஷ்டேஸ்வரரை ஒரு மாதம் வரை வழிபட்டுவந்தார். வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் தோஷம் இன்றுடன் முடிந்துவிட் டது.
நீ திட்டைத்திருத்தலத்தின் காலபைரவனாக எழுந்தருளி அருள் புரியலாம் என்றார். அன்று முதல் இத்தலம் கால பைரவரின் ஷேத்திரமாக விளங்கி வருகிறது. ஏழரை ச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர் கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேக ம் அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகு ம். இங்கு எழுந்தருளி உள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.
அதிசயம் ஒன்பது:

நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர். குருபகவான் ஒருவரே. உலகம் முழுவதும் உள்ள தன தான்ய, பணபொன் விஷயங்களுக்கு குருவேஅதிபதி. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இட ங்களை தன்பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர்.
மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களி னால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குருபகவான். எனவே, குருபார்க்க கோடி நன்மை என்ற பழ மொழி ஏற்பட்டது.
இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக் கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
இவருக்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவு ம், அதனையொட்டி லட்ச்சார்ச்சனையும் குருபரி கார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இங்கு எழுந்தருளி உள்ள ராஜ குரு பகவான் ஒன்பதாவது அதிசயம்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பிரதோஷம்

Posted By Muthukumar,Aug 31,2015

 20 வகை பிரதோஷ வழிபாட்டு பலன்கள் ................

1. தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்

வியாழன், 18 ஜூன், 2015

இறைவழிபாடு


Posted By Muthukumar,On June 18,2015

இந்த தெய்வங்களை வணங்கினால் உங்கள் குறை தீரும் சித்தர்கள் அருளியது ..

காரியம் நடக்க-விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

செவ்வாய், 9 ஜூன், 2015

லட்சுமி கடாட்சம் உண்டாக செல்வவளம் பெருக எளிய பரிகாரம்

Posted By Muthukumar,On June 9,2015
சம்பளம் வாங்கியவுடன் வாங்கவேண்டிய மங்களப் பொருட்கள் இனிப்பு,பால்,மல்லிகைப்பூ, இவற்றில் ஒன்றையாவது வாங்கினால் செல்வம் பெருகும்..வீண் செலவுகளை குறைக்கும்..விருத்தியாகும்...

பூமிகாரகன் ,ரத்தத்துக்கு அதிபதி,ஆரோக்கியத்துக்கு பாதுகாவலன்,தொழிலுக்கு கர்த்தாவான முருகனின் விருப்பமான செவ்வரளி மரத்தை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கடன் விரைவில் அடைபடும்..நோய்கள் பாதிப்பு குறையும்..மருதாணி வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ செடி ,வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்...முல்லைச்செடி வளர்த்தால் பெரியோர்கள் ஆசி கிடைக்கும்..செல்வாக்கு வளரும்..செம்பருத்தி வள்ர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம்..மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!

கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வையுங்கள் வாஸ்து மீறல்கள் நீங்கி தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் கண் திருஷ்டி போகும்..யனை என்பது குருவின் வாகனம் இதனை வாசல் பகுதியில் சிலையாக வைக்கும்போது செல்வாக்கு அதிகரிக்கும்..முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி இருப்பார்கள் இது களிற்றுப்படிகள் எனப்படும் இப்போதெல்லாம் நிறைய மாடர்ன் டிசைன்கள் வந்துவிட்டன...ஆனால் அந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது..

தெரு வழியே யானை போனால் தண்ணீர் கொடுத்து வீட்டின் மீது தெளிக்க செய்யலாம்...இதனால் தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்..வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்...கரி ,விறகு ,பஞ்சு  போன்றவை வாங்கக்கூடாது..


பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்....பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம்..தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில்  இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்...

திருமணத் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி?




எண் கணித முறையில் திருமண தேதி :
1, 10, 19, 28 ஆம் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய
தேதிகள் இவர்க ளுக்கு அதிர்ஷ்டமான திருமண நாள்.
2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருக்க வேண்டும். 1, 10, 19, 6 15, 24 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிஷ்டமான திருமண எண்.
3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 3, 9, ஆகும். 3 12, 21, 9, 18, 27 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்ட திருமண தேதிகள்.
4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். 1, 10, 19, 28 தேதிகள் இவர்க ளுக்கு அதிர்ஷ்டமான திருமண நாட்கள்.
5, 14, 23 ஆம்தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருப்பது சிறப்பு. இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிக ளில் திருமணம் செய்யலாம்.
6, 15, 24 ஆம்தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6, 9 என இருக்க வேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27 தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பு.
7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 ஆகும். இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிகளில் திரு மணம் செய்வது அதிர்ஷ்டம்.
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். இவர்கள் 1, 10, 19 ஆகிய தேதிகளில் திருமணம் செய்ய லாம்.
9, 18, 27&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6,9 எனஇருக்கவேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27  ஆம் தேதிகளி ல் திருமணம் செய்வது சிறப்பு ஆகும்.