வியாழன், 18 ஜூன், 2015

இறைவழிபாடு


Posted By Muthukumar,On June 18,2015

இந்த தெய்வங்களை வணங்கினால் உங்கள் குறை தீரும் சித்தர்கள் அருளியது ..

காரியம் நடக்க-விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

செவ்வாய், 9 ஜூன், 2015

லட்சுமி கடாட்சம் உண்டாக செல்வவளம் பெருக எளிய பரிகாரம்

Posted By Muthukumar,On June 9,2015
சம்பளம் வாங்கியவுடன் வாங்கவேண்டிய மங்களப் பொருட்கள் இனிப்பு,பால்,மல்லிகைப்பூ, இவற்றில் ஒன்றையாவது வாங்கினால் செல்வம் பெருகும்..வீண் செலவுகளை குறைக்கும்..விருத்தியாகும்...

பூமிகாரகன் ,ரத்தத்துக்கு அதிபதி,ஆரோக்கியத்துக்கு பாதுகாவலன்,தொழிலுக்கு கர்த்தாவான முருகனின் விருப்பமான செவ்வரளி மரத்தை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கடன் விரைவில் அடைபடும்..நோய்கள் பாதிப்பு குறையும்..மருதாணி வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ செடி ,வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்...முல்லைச்செடி வளர்த்தால் பெரியோர்கள் ஆசி கிடைக்கும்..செல்வாக்கு வளரும்..செம்பருத்தி வள்ர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம்..மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!

கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வையுங்கள் வாஸ்து மீறல்கள் நீங்கி தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் கண் திருஷ்டி போகும்..யனை என்பது குருவின் வாகனம் இதனை வாசல் பகுதியில் சிலையாக வைக்கும்போது செல்வாக்கு அதிகரிக்கும்..முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி இருப்பார்கள் இது களிற்றுப்படிகள் எனப்படும் இப்போதெல்லாம் நிறைய மாடர்ன் டிசைன்கள் வந்துவிட்டன...ஆனால் அந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது..

தெரு வழியே யானை போனால் தண்ணீர் கொடுத்து வீட்டின் மீது தெளிக்க செய்யலாம்...இதனால் தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்..வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்...கரி ,விறகு ,பஞ்சு  போன்றவை வாங்கக்கூடாது..


பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்....பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம்..தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில்  இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்...

திருமணத் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி?




எண் கணித முறையில் திருமண தேதி :
1, 10, 19, 28 ஆம் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய
தேதிகள் இவர்க ளுக்கு அதிர்ஷ்டமான திருமண நாள்.
2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருக்க வேண்டும். 1, 10, 19, 6 15, 24 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிஷ்டமான திருமண எண்.
3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 3, 9, ஆகும். 3 12, 21, 9, 18, 27 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்ட திருமண தேதிகள்.
4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். 1, 10, 19, 28 தேதிகள் இவர்க ளுக்கு அதிர்ஷ்டமான திருமண நாட்கள்.
5, 14, 23 ஆம்தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருப்பது சிறப்பு. இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிக ளில் திருமணம் செய்யலாம்.
6, 15, 24 ஆம்தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6, 9 என இருக்க வேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27 தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பு.
7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 ஆகும். இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிகளில் திரு மணம் செய்வது அதிர்ஷ்டம்.
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். இவர்கள் 1, 10, 19 ஆகிய தேதிகளில் திருமணம் செய்ய லாம்.
9, 18, 27&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6,9 எனஇருக்கவேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27  ஆம் தேதிகளி ல் திருமணம் செய்வது சிறப்பு ஆகும்.