திருவண்ணாமலையின் வயது
உலகில் பல்வேறு தலங்களில் மலைமேல் இறைவன் அருள்புரிகிறார். ஆனால், திருவண்ணாமலையில் மலையே இறைவனாக இருக்கிறது. கயிலாயமலை இறைவனின் இருப்பிடமாக இருந்தாலும், இறைவனே சுயம்பு வடிவாய் மலையாய் காட்சியளிப்பது திருவண்ணாமலையே. இந்த மலை 2,748 அடி உயரம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 168 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையின் தென்மேற்கு திசையில் உள்ள அல்லிசுனை அருகில் அல்லிகுகை உள்ளது. கிரிவலப்பாதை 14 கி.மீ., தூரம் கொண்டது. அண்ணாமலையார் கோயில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி அதாவது 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பழங்கால வரலாறு மற்றும் புவியியல் அமைப்பின்படி பார்த்தால், திருவண்ணாமலையின் வயது 260 கோடி ஆண்டுகளாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. கிரிவலம் செல்வது எப்படி? திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையின் துவக்கத்தில் இந்திர லிங்க கோயில் உள்ளது, இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம்செய்துவிட்டு வலம் வர துவங்க வேண்டும். சுற்றுப்பாதையிலுள்ள அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், நேர் அண்ணாமலை, வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் வழியாக, சுடுகாட்டிலுள்ள ஈசான்ய லிங்க கோயிலுக்குச் செல்ல வேண்டும். மனிதா! நீ யாரை வேண்டினாலும், என்ன சம்பாதித்தாலும் இறுதியில் வருமிடம் இதுவே, என்பதை <கிரிவலத்தின் இறுதியில் நாம் உணர்கிறோம். இதனால் ஆசைகள் அகல்கின்றன. ஆணவம் நீங்குகிறது. அகங்காரம் அழிகிறது. கடைசியாக அண்ணாமலையார் கோயிலுக்குள் நுழைந்து, அருணாசலேஸ்வரரையும், உண்ணாமுலையம்மனையும், இதர தெய்வங்களையும் வணங்கி விட்டு கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். சொக்கப்பனை: தென்மாவட்ட கிராமங்களில் திருக்கார்த்திகையன்று சூந்து என்னும் ஒருவகை வெள்ளை நிற குச்சியைக் கட்டுகளாகக் கட்டி எரிப்பர். குழந்தைகளுக்கு சூந்து மிகவும் பிடிக்கும். இப்போது சூந்துக் குச்சி கிடைப்பதில்லை என்பதால், பனை, தென்னை ஓலைகளைக் கட்டாகக் கட்டி எரிக்கின்றனர். இறைவனை ஒளிவடிவில் பார்ப்பதே இதன் நோக்கம். பல கோயில்களில் கார்த்திகையன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. பனை மரத்தை நட்டு அதைச்சுற்றிலும் ஓலை கட்டுவர். சிவபார்வதியை சப்பரத்தில் அமர வைத்து அந்த இடத்திற்கு கொண்டு வருவர். பூஜாரி சுவாமிக்கு தீபாராதனை காட்டி, அந்த கற்பூர நெருப்பை ஓலையில் பற்ற வைப்பார். தீ கொளுந்து விட்டு எரியும். மக்களும் தங்கள் கையில் கொண்டு வந்த ஓலைகளை அந்த நெருப்பில் போடுவர். இறைவனை ஒளிவடிவாகக் கண்டு தரிசித்து மகிழ்வர். திருவண்ணாமலை கோபுரங்கள்: திருவண்ணாமலை கோபுரம், தமிழகத்தின் மூன்றாவது பெரிய @காபுரம் ஆகும். திருவண்ணாமலை ராஜகோபுரம் 11 நிலைகளைக் கொண்டது. 216 அடி உயரமும், 98 அடி அகலமும் கொண்டது. திருமஞ்சன கோபுரம் 157 அடி உயரமும், மேற்கு கோபுரம் 144 அடி உயரமும் அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி உயரமும் கொண்டவை. அருணகிரியார் அவதாரத் தலம்: முருகபக்தரும், வாய்மணக்க திருப்புகழ் பாடியவருமான அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தார். பெண்ணாசையால் கெட்ட அவர், இங்குள்ள கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகப்பெருமானே அவரைத் தாங்கிப் பிடித்தார். தன்னைப் பாடுமாறு முத்தைத்தரு பத்தித்திருநகை என்று அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரியார் அதை முதலடியாகக் கொண்டு திருப்புகழைப் பாடினார். பின், தமிழகத்திலுள்ள ஏராளமான கோயில்களுக்கு சென்று, அங்குள்ள முருகனைப் பற்றிப் பாடினார். திருவெம்பாவை ஒலித்த ஊர்: மதுரை திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர், அண்ணாமலையாரை வணங்க வருமாறு அழைத்த பாடல்களே மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை ஆகும். 20 பாடல்கள் கொண்ட இந்த பாவை பாடப்பாட தித்திக்கும். மார்கழியில் வீட்டுக்கு வீடு பாடும் இந்தப் பாடல் அண்ணாமலையாரைச் சிறப்பிக்கின்றன. குறிப்பாக அண்ணாமலையார் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது. கார்த்திகையன்று தீபமேற்றும் பழக்கம் வந்தது எப்படி? சிவன் மீது தீவிர பக்திகொண்ட பக்தர் ஒருவர் கணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அறுத்து, அதை விற்றுக் கிடைத்த பணத்தில் திருவிளக்கேற்றி வந்தார். புல் விற்பனையாகாத சமயங்களில், அந்தப் புல்லையே திரிபோல் திரித்து விளக்கேற்றினார். ஜாமகால பூஜை வரை கோயில்களில் விளக்கு எரிய வேண்டும். ஆனால், ஒரு சமயம் கணம்புல் சீக்கிரம் அணைய இருந்தது. இதனால் தன்னுடைய தலைமுடியையே திரியாக்கி விளக்காக எரிக்க முயன்றார். தன் பக்தனை மேலும் சோதிக்க விரும்பாத சிவபெருமான், அவருக்கு காட்சியளித்து கைலாய பதவி வழங்கினார். அந்தப் பக்தருக்கு கணம்புல்லர் என்ற பெயர் ஏற்பட்டது. நாயன்மார்கள் வரிசையில் அவர் இடம் பெற்றுள்ளார். கோயில்களில் தீபமேற்றுவதற்கு எக்காலத்திலும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்காக, ஒரு விழாவே உருவாக்கப்பட்டது. கார்த்திகை நட்சத்திரம் அக்னிக்குரியது. சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து உருவாக்கிய முருகப்பெருமானை கார்த்திகைப் பெண்கள் எனப்படும் ஆறுபேரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அவர்களால் மட்டுமே அக்னி பிழம்பான அந்தக் குழந்தையை வளர்க்க முடிந்தது. இந்த அடிப்படையில், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தீபமேற்றும் பழக்கம் ஏற்பட்டது. பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம். ஞாயிறு - மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல் திங்கள் - செல்வவளம் கிடைத்தல் செவ்வாய் - வறுமை, கடன் நீங்குதல் புதன் - கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்) வியாழன் - தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல் வெள்ளி - விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல் சனி - கிரக தோஷங்கள் நீங்கி துன்பம் நீங்குதல் அமாவாசை நாட்கள் - மன நிம்மதி கிடைத்தல் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக சுற்றுதல் - குறையிருந்தாலும் மகப்பேறு கிடைத்தல் திருவண்ணாமலைல் 360 தீர்த்தங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மூர்த்தங்களாலும் (தெய்வ விக்ரஹங்கள்) தீர்த்தங்களாலும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக கோயிலிலுள்ள கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே புண்ணியம் மிகுந்த சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இதிலுள்ள தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு அண்ணாமலையாரையும், உண்ணாமலையம்மையையும் தரிசித்து வழிபட வேண்டும். காலபைரவர் சன்னதிக்கு எதிரில் பிரம்மதீர்த்தம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மலையில் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும். அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறைச் சுனை, அரசன் சுனை, மயிலாடும் பாறைச் சுனை, ஊத்துக் குட்டைச் சுனை, பவழக்குன்றுச் சுனை கழுதைச் குறத்திச் சுனை, சாரங்கன் சுனை, கரடிச் சுனை, தனக்க மரத்துச்சுனை, புங்க மரத்துச் சுனை, நெல்லிமரத்துச் சுனை, ஆலமரத்துச் சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்துச் சுனை, ஆள் இறங்கிக் குளித்திடும் அளவுக்கான தொல்லாங்கன் சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனை (ஒறட்டு என்றால் இடது என்று பொருள்), தவழ்ந்து உள்ளே சென்று நீர் குடிக்கும் புகுந்து குடிச்சான் சுனை ஆகிய குட்டித்தீர்த்தங்களும் உள்ளன. அடிஅண்ணாமலை அருகில் பொங்குமடு தீர்த்தம், துர்க்கை அம்மன் கோயில் அருகிலுள்ள கட்க தீர்த்தம், ரமணாஸ்ரமத்துக்கு அருகிலுள்ள சிம்ம தீர்த்தம் உட்பட 360 தீர்த்தங்கள் மலைவலம் வரும் பகுதியில் உள்ளன. பஞ்ச பருவ விழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திர சோழ மன்னர் காலத்தில் இருந்தே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மூன்றாம் குலோத்துங்க மன்னரின் காலத்தில் இவ்விரண்டு திருவிழாவுடன், தை மாதத்தில் திருவூடல் விழாவும் நடந்துள்ளது. சித்திரையில் 10 நாள் திருவிழா நடைபெறும். ஆவணியில் மூல நாளில் மூலத்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாக்களை பஞ்ச பருவ விழாக்கள் என்று கூறுகின்றனர். அரோஹரா - விளக்கம் ஒருவர் இன்னொருவருக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்து அது திரும்பி வரவில்லை என்றால் உன் பணம் அரோஹரா தான் என்று விளையாட்டாக சொல்வது வழக்கம். அரோஹரா என்ற சொல்லுக்கு போய்விட்டது என்று பொருள். ஹர ஓ ஹர என்ற சொல் தமிழில் அரோகரா என திரிந்தது. சிவ நாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹர என்றால் பாவங்கள் போய்விட்டது என்று பொருள் கொள்ள வேண்டும். இதை இடைவிடாது உச்சரித்தால் நம் பாவங்கள் யாவும் ஒழிந்து விடும். அதனால் தான் அண்ணாமலையில் அரோஹரா என்ற சொல் வேத மந்திரமாக ஒலிக்கிறது. எட்டு திசை காவல் தெய்வங்கள் திருவண்ணாமலையை கிரிவலம் வரும் போது நாம் எட்டு லிங்கங்களை வழிபடலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கும் காவல் தெய்வங்களாகவும், அதிபதியாகவும், நாயகர்களாகவும் திகழ்கின்றனர். இந்திரலிங்கம் கிழக்கு திசை காவல் தெய்வம், அக்கினி லிங்கம் தென்கிழக்கு திசைக்கு அதிபதி, எமலிங்கம் தென்திசைக்கு அதிபதி, நிருதிலிங்கம் தென்மேற்குத் திசைக் காவல் தெய்வம், வருணலிங்கம் மேற்கு திசைக்கு அதிபதி, வாயு லிங்கம் வடமேற்கு திசைக்கான காவல் தெய்வம், குபேரலிங்கம் வடக்குத்திசை நாயகன், ஈசான்ய லிங்கம் வடகிழக்கு திசைகளின் தெய்வமாகும். கார்த்திகைக்கு முக்கியத்துவம் ஏன்? தந்தை, மகன்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் விழாவாக, திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. முருகன் வளர்த்த ஆறு முனிபத்தினிகளை சிவபெருமான் ஒரே நட்சத்திரமாக மாற்றினார். அந்த நட்சத்திரத்துக்கு பரிபூரண ஒளி கொடுத்து கார்த்திகை என பெயர் சூட்டினார். எனவே தான் முருகனுக்கு உகந்த நாட்களில் கார்த்திகை பிரதான இடம் பிடித்துள்ளது. இதனால் தான் கார்த்திகை நட்சத்திரத்தில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுகின்றனர். அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயரே இருக்கிறது. இதே நாளில் தான் சிவனுக்கு உரிய மகா தீபத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. அதாவது தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா வருகிறது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிறர் குழந்தைகள் மீதும் உயிரையே வைத்திருப்பர் என்றும், தைரியசாலிகளாக இருப்பர் என்றும், நியாயம் காக்க உயிரையும் கொடுப்பர் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாக ஆண்டுப்பிறப்பைக் கணக்கிட்ட பழக்கமும் வழக்கத்திலிருந்ததாக பழந்தமிழ் நூல்களின் ஆய்வுக்குறிப்பில் உள்ளது. ரிக் வேதத்திலும் நட்சத்திரங்களை கணக்கிடும் போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு எண்ணப்படுகிறது. சிவனுக்கும், முருகனுக்கும் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்பிருப்பதால் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. கார்த்திகை விளக்கில் ஊற்றும் எண்ணெய் திருக்கார்த்திகை தினத்தன்று கிளியஞ்சட்டியில் (களிமண்ணால் சிறிய அளவில் செய்யப்படும் விளக்கு) பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத்திரி போட்டு அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்துவிளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக நம்பிக்கையுள்ளது. ஆகவே தீபத்தில் பசு நெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது. புயலை அடக்கும் தீபம் திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால் புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையில் புயல் போல துன்பங்கள் வந்தாலும், தீபதரிசனம் செய்தால் அவை எளிதில் நீங்கிவிடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துவதாக கூறப்படுகிறது. விளக்கு தானம் திருவண்ணாமலையில் வசிப்பவர்கள் கார்த்திகை திருநாள் அன்று தங்கள் வீடுகளிலுள்ள விளக்குகளை கிரிவலம் செல்லும் பாதையில் வைத்து ஏற்றுகின்றனர். இதன் மூலம் மலையில் ஏற்றப்பட்ட மகாதீபத்தின் ஜோதி தங்கள் வீடுகளிலுள்ள விளக்குகளிலும் படிவதாக நம்பிக்கை. பின்னர் தங்கள் வீடுகளுக்கு எடுத்து வந்து விளக்குகளை ஏற்றுகின்றனர். இதனால் வாழ்க்கையில் புதிய ஒளி பிறப்பதாக நம்பப்படுகிறது. சிலர் இந்த விளக்குகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தானமாகவும் வழங்குகின்றனர். நாம் யார் தெரியுமா? திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பஞ்ச பூததலங்களில் அக்னிரூபனாகவும் சுயம்புலிங்கமாகவும் (தானாகவே தோன்றியது) அருள்புரிகிறார்.சுயம்புலிங தீபத் திருநாளில்..! தீபத் திருநாளன்று மலையடிவாரத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுவது-பரணி தீபம், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படுவது மகாதீபம். மகாதீபத்துக்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மகாதீபத்துக்கான வெண்கலக் கொப்பரை, கி.பி. 1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயனால் வழங்கப்பட்டது. மலை மேல் தீபம் ஏற்ற உரிடை பெற்றவர்கள் பர்வத ராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவர். ஆலயத்தின் தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன் மகாதீபம் ஏற்றப்படும். அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் |
புதன், 7 ஆகஸ்ட், 2013
செவ்வாய், 30 ஜூலை, 2013
By Muthukumar On July 30,2013
கணவனிடம் மனைவி எதிர்ப்பார்ப்பது என்ன??
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.7
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி!!
வியாழன், 25 ஜூலை, 2013
சித்தரின் பெயர் பிறந்த மாதம் நட்சத்திரம் வாழ்நாள சமாதியடைந்த இடம்
1.பதஞ்சலி பங்குனி மூலம் 5 யுகம் 7நாட்கள் இராமேசுவரம்.
2.அகத்தியர் மார்கழி ஆயில்யம் 4 யுகம் 48 நாட்கள் திருவனந்தபுரம்.
3.கமலமுனி வைகாசி பூசம் 4000 வருடம் 48 நாட்கள திருவாரூர்.
4.திருமூலர் புரட்டாதி அவிட்டம் 3000 வருடம் 13 நாட்கள் சிதம்பரம்.
5.குதம்பையார் ஆடி விசாகம் 1800 வருடம் 16 நாட்கள் மாயவரம்.
6.கோரக்கர் கார்த்திகை ஆயில்யம் 880 வருடம் 11 நாட்கள் பேரூர்.
7.தன்வந்திரி ஐப்பசி புனர்பூசம் 800 வருடம் 32 நாட்கள் வைத்தீச்வரன் கோவில்.
8.சுந்தரானந்தர் ஆவணி ரேவதி 800 வருடம் 28 நாட்கள் மதுரை.
9.கொங்கணர் சித்திரை உத்திராடம் 800 வருடம் 16 நாட்கள் திருப்பதி.
10.சட்டமுனி ஆவணி மிருகசீரிடம் 800 வருடம் 14 நாட்கள் திருவரங்கம்.
11.வான்மீகர் புரட்டாதி அனுசம் 700 வருடம் 32 நாட்கள் எட்டுக்குடி.
12.ராமதேவர் மாசி பூரம் 700 வருடம் 06 நாட்கள் அழகர்மலை.
13.இடைக்காடர் புரட்டாதி திருவாதிரை 600 வருடம் 18 நாட்கள் திருவண்ணாமலை.
14.மச்சமுனி ஆடி ரோகிணி 300 வருடம் 62 நாட்கள் திருப்பரங்குன்றம்.
15.கருவூரார் சித்திரை அஸ்தம் 300 வருடம் 42 நாட்கள் கருவூர், தஞ்சை.
16.போகர் வைகாசி பரணி 300 வருடம் 18 நாட்கள் பழனி.
17.பாம்பாட்டி கார்த்திகை மிருகசீரிடம் 123 வருடம் 14 நாட்கள் சங்கரன்கோவில்.
18.சிவவாக்கியர் காலம் தெரியவில்லை கும்பகோணம்.
108 சித்தர்கள்

108 சித்தர்கள் 1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.
By Muthukumar,On July 25,2013,
குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:
2. நவகோடி சித்தர்கள்
3. நவநாத சித்தர்கள்
4. நாத சித்தர்கள்
5. நாதாந்த சித்தர்கள்
6. வேத சித்தர்கள்
7. வேதாந்த சித்தர்கள்
8. சித்த சித்தர்கள்
9. சித்தாந்த சித்தர்கள்
10. தவ சித்தர்கள்
11. வேள்விச் சித்தர்கள்
12. ஞான சித்தர்கள்
13. மறைச் சித்தர்கள்
14. முறைச் சித்தர்கள்
15. நெறிச் சித்தர்கள்
16. மந்திறச் சித்தர்கள்
17. எந்திறச் சித்தர்கள்
18. மந்தரச் சித்தர்கள்
19. மாந்தரச் சித்தர்கள்
20. மாந்தரீகச் சித்தர்கள்
21. தந்தரச் சித்தர்கள்
22. தாந்தரச் சித்தர்கள்
23. தாந்தரீகச் சித்தர்கள்
24. நான்மறைச் சித்தர்கள்
25. நான்முறைச் சித்தர்கள்
26. நானெறிச் சித்தர்கள்
27. நான்வேதச் சித்தர்கள்
28. பத்த சித்தர்கள்
29. பத்தாந்த சித்தர்கள்
30. போத்த சித்தர்கள்
31. போத்தாந்த சித்தர்கள்
32. புத்த சித்தர்கள்
33. புத்தாந்த சித்தர்கள்
34. முத்த சித்தர்கள்
35. முத்தாந்த சித்தர்கள்
36. சீவன்முத்த சித்தர்கள்
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
38. அருவ சித்தர்கள்
39. அருவுருவ சித்தர்கள்
40. உருவ சித்தர்கள்
ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:
By Muthukumar,On July 25,2013,
1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
ஆடைவகைகள்:
சாலுவை : சலதோஷம், தலைவலி, வாத நோய், வயிற்றுவலி, குளிர்பனி போகும்.
பட்டாடை : பித்தம், கபம் போகும். மகிழ்ச்சி, உத்தி, வியர்வை, காந்தி உண்டாகும்.
வெண்பட்டு : சுரம், சீதம், வாதம் போகும். காந்தி, அழகு உண்டாகும்.
நாருமடி : சளி, நீர் ஏற்றம், வாய்வு, சந்தி போகும். உடல் சுத்தி உண்டாகும்.
வெள்ளாடை : முக்குற்றம், வியர்வை போகும். ஆயுசு, அழகு, களிப்பு, போதம், வெற்றி உண்டாகும்.
சிவப்பாடை : பித்தம், வெப்பம், சுரம், வாந்தி, அருசி, கபம், மந்தம் உண்டாகும்.
பச்சை ஆடை : உடல்வெப்பம், ஐயம் போகும், கண்குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உண்டாகும்.
கறுப்பாடை : காசம், வெப்பு, விஷம், மந்தாக்கினி, பித்தம் போகும்.
மஞ்சளாடை : நீர்க்கடுப்பு, காசம், விஷ சுரம், நமைச்சல், வெப்பு, மலம் போகும்.
கம்பளம் : பெரும்பாடு, அசீரணம், கிராணி, சூலை, பேதி, சீழ் போகும்.
அழுக்குத்துணி : அழகு, அறிவு, போகும்; நோய், குளிர், துக்கம், தினவு, வெட்கம் உண்டாகும்
வெந்நீரும் பாத்திரமும்
தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.
1. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.
2. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்
3. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.
4. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.
5. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.
6. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.
7. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.
8. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும்
என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.
வெந்நீர் மருந்து
தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சி பருகுங்கள்.
அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்
என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.
- பதார்த்த குண சிந்தாமணி தமிழ் வைத்திய நூல்
வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
By Muthukumar On July25,2013,
பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.
இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். . வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
அங்காடியில் போடி வாங்க வேண்டாம்.
சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள்
By Muthukumar,On July 25,2013.
சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள்
அம்பிகையின் அருள் பெற , உறுதுணையாக நிற்கும் சப்த மாதாக்கள் , காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள் பற்றியே..
ப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ப்ராம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.
மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
தியான சுலோகம்
தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா
மந்திரம்
ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.
மந்திரம்
ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
கௌமாரி
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
தியான சுலோகம்
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!
மந்திரம்
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
வைஷ்ணவி
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.
மந்திரம்
ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
வாராஹி
பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .
தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
இந்திராணி:
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.
இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.
தியான சுலோகம்
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:
மந்திரம்
ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.
சாமுண்டி
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.
மந்திரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்
மோகினி தந்திரம்
மூல மந்திரம்ஓம் ஐயும் கிலியும் செளவும் செளவும் கிலியும் ஐயும்
ஹரி ஹரி வா வா ஆதி மோகினி
அந்தி மோகினி
செளவும் மோகினி
போடு போடு மெளவு
சிவ சிவ பிடி பிடி மோகினி
பிடித்துவா மோகினி
அவள் விரித்திரிந்த சேலையுடன் பாதமுருகி
காமமுருகி உடல் உருக
நாவடங்க நான் அழைத்த பேரை சீக்கிரமாக கொண்டுவந்து சேர் சிவா|"
பூஜை விபரம்காதோலை கருகமணி சித்தாடை புஸ்பம் சரக்குசாவல்குளம்பு குங்குமம் விபூதி சாம்பிரானி தூபம்
தேங்காய்பளம் வெற்ரிலை பாக்கு
புது சூளை சாம்பல் மேல் எந்திரம் வரைந்து
வடக்கு முகமாய் அமர்ந்து சிகப்பு அரளி புஸ்பத்தால் 1008 உரு கொடுத்வேண்டியவர் மேல் போட அவர் வசியமாவார் :
மோகினி வசியம்
கோவிலில் புதைக்கும் முறைஹரி ஓம் ஐயும் கிலியும் செளவும் சங் ரங் வங் மோஹய மோஹய
இன்னாளுடைய மகளை
இன்னான் மகன் இன்னான் மேல் மோஹிக்க மோஹிக்க சிவ
:1008 ஊருமோகினி தந்திரம்
மோகினி அளைப்பு (ஆகர்சனம்) எந்திரம் மந்திரம்மூல மந்திரம்ஓம் ஐயும் கிலியும் செளவும் செளவும் கிலியும் ஐயும்
ஹரி ஹரி வா வா ஆதி மோகினி
அந்தி மோகினி
செளவும் மோகினி
போடு போடு மெளவு
சிவ சிவ பிடி பிடி மோகினி
பிடித்துவா மோகினி
அவள் விரித்திரிந்த சேலையுடன் பாதமுருகி
காமமுருகி உடல் உருக
நாவடங்க நான் அழைத்த பேரை சீக்கிரமாக கொண்டுவந்து சேர் சிவா|"
பூஜை விபரம்காதோலை கருகமணி சித்தாடை புஸ்பம் சரக்குசாவல்குளம்பு குங்குமம் விபூதி சாம்பிரானி தூபம்
தேங்காய்பளம் வெற்ரிலை பாக்கு
புது சூளை சாம்பல் மேல் எந்திரம் வரைந்து
வடக்கு முகமாய் அமர்ந்து சிகப்பு அரளி புஸ்பத்தால் 1008 உரு கொடுத்வேண்டியவர் மேல் போட அவர் வசியமாவார் :
மோகினி வசியம்
கோவிலில் புதைக்கும் முறைஹரி ஓம் ஐயும் கிலியும் செளவும் சங் ரங் வங் மோஹய மோஹய
இன்னாளுடைய மகளை
இன்னான் மகன் இன்னான் மேல் மோஹிக்க மோஹிக்க சிவ
:1008 ஊரு
மோகினி மோகன எந்திரம்
ஹரி ஹரி வா வா ஆதி மோகினி
அந்தி மோகினி
செளவும் மோகினி
போடு போடு மெளவு
சிவ சிவ பிடி பிடி மோகினி
பிடித்துவா மோகினி
அவள் விரித்திரிந்த சேலையுடன் பாதமுருகி
காமமுருகி உடல் உருக
நாவடங்க நான் அழைத்த பேரை சீக்கிரமாக கொண்டுவந்து சேர் சிவா|"
பூஜை விபரம்காதோலை கருகமணி சித்தாடை புஸ்பம் சரக்குசாவல்குளம்பு குங்குமம் விபூதி சாம்பிரானி தூபம்
தேங்காய்பளம் வெற்ரிலை பாக்கு
புது சூளை சாம்பல் மேல் எந்திரம் வரைந்து
வடக்கு முகமாய் அமர்ந்து சிகப்பு அரளி புஸ்பத்தால் 1008 உரு கொடுத்வேண்டியவர் மேல் போட அவர் வசியமாவார் :
மோகினி வசியம்
கோவிலில் புதைக்கும் முறைஹரி ஓம் ஐயும் கிலியும் செளவும் சங் ரங் வங் மோஹய மோஹய
இன்னாளுடைய மகளை
இன்னான் மகன் இன்னான் மேல் மோஹிக்க மோஹிக்க சிவ
:1008 ஊருமோகினி தந்திரம்
மோகினி அளைப்பு (ஆகர்சனம்) எந்திரம் மந்திரம்மூல மந்திரம்ஓம் ஐயும் கிலியும் செளவும் செளவும் கிலியும் ஐயும்
ஹரி ஹரி வா வா ஆதி மோகினி
அந்தி மோகினி
செளவும் மோகினி
போடு போடு மெளவு
சிவ சிவ பிடி பிடி மோகினி
பிடித்துவா மோகினி
அவள் விரித்திரிந்த சேலையுடன் பாதமுருகி
காமமுருகி உடல் உருக
நாவடங்க நான் அழைத்த பேரை சீக்கிரமாக கொண்டுவந்து சேர் சிவா|"
பூஜை விபரம்காதோலை கருகமணி சித்தாடை புஸ்பம் சரக்குசாவல்குளம்பு குங்குமம் விபூதி சாம்பிரானி தூபம்
தேங்காய்பளம் வெற்ரிலை பாக்கு
புது சூளை சாம்பல் மேல் எந்திரம் வரைந்து
வடக்கு முகமாய் அமர்ந்து சிகப்பு அரளி புஸ்பத்தால் 1008 உரு கொடுத்வேண்டியவர் மேல் போட அவர் வசியமாவார் :
மோகினி வசியம்
கோவிலில் புதைக்கும் முறைஹரி ஓம் ஐயும் கிலியும் செளவும் சங் ரங் வங் மோஹய மோஹய
இன்னாளுடைய மகளை
இன்னான் மகன் இன்னான் மேல் மோஹிக்க மோஹிக்க சிவ
:1008 ஊரு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)