ஸ்ரீ மஹா பைரவர் மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள். ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம். சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர்.
ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள். தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம்.
மணி,மந்திரம்,ஔஸதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள். சித்தர்கள் பாதையில் இந்த மணி,மந்திரம்,ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி முழுமைபெறாத. அனுகிரகம் வேண்டும்.
ஒட்டக்கூத்தர் புலவரால் இயற்றப்பட்ட ஒரு மிக மிக பழமையான பாடல் ...
உரக கங்கணம் தருவன பணமணி
உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ
உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி
உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய
கரதலம் தரும் தமருக சதிபொதி
கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு
கலகலன் கலன்கலன் என வருமொரு
கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம்.
ஸ்ரீ மஹா பைரவர் தன் கைகளில் கங்கணமாகக் கட்டி இருக்கிற பாம்பு கக்கும் மாணிக்கக் கற்களால் உலகம் முழுவதும் துயிலெழ வெயிலெழ. உடை தவிர்ந்த தன் இடுப்பினில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்ப, கையில் உள்ள தமருகம் என்னும் உடுக்கை எழுப்பும் தாள ஓசையும்,சிவந்த சிலம்பின் ஒலியும் சேர்ந்து கலன்,கலன் என்னும் இனிய நாதம் உண்டாகுமாம். இப்படி காட்சி தரும் கரிய ஆடை அணிந்த பைரவர் பாதம் பணிந்து வணங்குவோம்.
...
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்:
துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
மாதங்கள் ... துவாதச ஆதித்தியர்கள் ... ஆதித்தியர்களின் பிராண தேவதை
சித்திரை ... அம்சுமான் ... சண்ட பைரவர்
வைகாசி ... தாதா ... ருரு பைரவர்
ஆனி ... ஸவிதா ... உன்மத்த பைரவர்
ஆடி ... அரியமான் ... கபால பைரவர்
ஆவணி ... விஸ்வான் ... ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி ... பகன் ... வடுக பைரவர்
ஐப்பசி ... பர்ஜன்யன் ... ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை ... துவஷ்டா ... பீஷண பைரவர்
மார்கழி ... மித்திரன் ... அசிதாங்க பைரவர்
தை ...nவிஷ்ணு ... குரோதன பைரவர்
மாசி ... வருணன் ... ஸம்ஹார பைரவர்
பங்குனி ... பூஷா .... சட்டநாத பைரவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக