செவ்வாய், 30 டிசம்பர், 2014

எந்திரம் எழுதும் முறை


By Muthukumar ,On December 30,2014


      முதலில் வினாயகப் பெருமானை வழிபடவேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு 6 அங்குல நீளம் 6 அங்குல அகலம் உள்ள செம்பு அல்லது வெள்ளி தகட்டை எடுத்து கொள்ளுங்கள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் ஆதி மூலகடவுளான விநாயகரை முதலில் வழிபடவேண்டும். எனவே கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு விநாயகரை மனதில் எண்ணி
அரி ஓம் திரிபுர சங்கரா விக்னேஸ்வர ரூபாடம் டம் சரணம் நின்னை நான் நம்பினேன்வா வா கணபதி மகா கணபதி என்நாவிலும் வாக்கிலும் வந்து நிற்க சிவா.
நெடுமால் திருமருகா நித்தம் முதலாககொடுமால் வினையறுக்கும் கொன்றே தடுமாறதுஎண் எழுத்து முப்பது வாயும் என் சித்தத்தே நிற்கஉத்தமனே உன் பாதம் பணி
அரி ஓம் சகல குரு பேந்தம் சமஸ்ட குருவேகெங்கா ஆதி குருவே ஜெகநாத குருஆத்ம சுத்தி பஞ்ச பூத தேவர்கள் காக்கஅண்ட பிண்ட சராசரமெல்லாம் என் முன் நிற்க சிவா.
என முறை கூறி மனதில் தியானித்து குரு வணக்கத்தை சொல்லி பின் மூலகணபதியை  வணங்கி தகட்டிற்கு சாம்பிராணி காண்பித்து ஊதுபத்தியை ஏற்றி வைத்துக்கொண்டு தகட்டிற்கு சாப விமோசனம்கொடுக்க வேண்டும்.
ஓம் அகக்தியர் சாபம் நசி நசிஓம் பதினென்சித்தர்கள் சாபம் நசி நசிஒம் தேவர்கள் சாபம் நசி நசிஓம் எவரிட்ட சாபமாயினும் நசி நசிஒம் எந்திர தேவா உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா ஓம் சக்தி நிற்க சிவன் நிற்க சக்தியும் சிவனும் ஒத்து நிற்க சிவா.
- என முறை கூறி சிறிது விபூதியை தகட்டின் மீது போடவும். தகடு சுத்தி ஆகி சாபவிமோசனம் பெறும்.
பேனாவில் உள்ள மை தீர்ந்துபோன லெட்டின் உதவியால் தகட்டில் எழுதலாம் வேறு தங்கம் செம்பு ஊசிகள் கொண்டும் எழுதலாம். ஆனால் தகடு கிழிந்துவிடவும் வாய்ப்பு உண்டு எனவே லெட்தான் உசிதமானது.
ஓம் பால கணபதியே நமஓம் சக்தி கணபதியே நமஓம் த்ருண கணபதியே நமஓம் பக்தி கணபதியே நமஓம் விக்னேஸ்வர ரூபாய நமஓம் மகா கணபதியே நம
என சொல்லவும். ஒவ்வொரு தடவையும் நம என்று சொல்லி முடியும் போது சிறிது விபூதி அல்லது பூ விநாயகர் முன் போடவும். பிறகு குரு வணக்கத்தை 11 முறை சொல்லி தியானித்து பூமியைத் தொட்டு வணங்கவும்.தகடு எழுத ஆரம்பித்து விட்டால் வேறு காரியம் சம்பந்தமாக இடையே எழுந்து போக்க்கூடாது ஒரே முறையில் எழுதி முடிக்கவேண்டும். தீய சிந்தனைகள் இல்லாதவாறு கணபதியின் சிந்தனை ஒன்றிலேயே மனம் ஈடுபட்டு இறுக்க வேண்டும். தகடு கிழிந்து விட்டால் வேறு தகடுதான் எழுதவேண்டும் ஓட்டை விழுந்த தகட்டை ஓடும் நீரில் (ஆறு கடல் வாய்கால்) போட்டு விடவேண்டும்.(எந்த தெய்வீக பொருளானாலும் கழிக்கும் போது ஓடும் நீரில் தான் போடவேண்டும்).
தகடு எழுதியவுடன் சூரிய ஒளியிலோ லைட் வெளிச்சத்திலோ நேராக துக்கிபிடித்து பார்த்தால் ஓட்டை விழுந்திருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் அறியலாம். ஒரு தகட்டில் எந்திரம் எழுதினால் மட்டும் போதாது அதற்கு உயிரூட்டவேண்டும். இதற்க்கு உருவேற்றுதல் என்று பொருள். ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்வது உரு எனப்படும்.


சொற்களுக்கு தனி சக்தி உண்டு நமசிவாய என்று ஒரு தரம் சொன்னால் ஒரு உரு. ஆயிரம் முறை சொன்னால் ஆயிரம் உரு எனப்படும். எனவே நாம் ஒரு தகட்டில் எந்திரம் எழுதி அதில் யந்திரத்திற்குறிய வசிய மை சிறிது தடவி விட்டு அந்த எந்திரத்துக்கு உரிய மந்திரத்தை  சொன்னால் அந்த தகட்டிற்கு உரு ஏறுகிறது. மையின் சிறப்பால் அந்த தேவதை எளிதில் வசம் அடைவதுடன் உருவும் வேகமாக தகட்டால் கிரகிக்கப்படுகிறது. இதுதான் உரு ஏற்றும் முறை ஆனால் இதனை முறையாக விதி முறைகளுடன் செய்யவேண்டும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக