ஞாயிறு, 14 ஜூலை, 2013

கண்டரமாணிக்கம்: ஆண்டப்பிள்ளை கால பைரவர்


Posted On July 14,2013,BY Kumaran

கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் சுகந்தவனேசுவரர். இறைவி சாமீப வல்லி

இங்கு பைரவர் காலபைரவராக, பல்வேறு அற்புத வேலைப்பாடுகளுடன் எழுந்தருளியுள்ளார். இது நவபாஷாணச்சிலை என்றும், பைரவ சித்தர் என்பவர் உருவாக்கி வழிபட்டது என்ற தகவலும் கூறப்படுகின்றது.

பிரம்ம கபாலத்தை ஏந்தியுள்ளதால் கபால பைரவர் என்றும், கால பைரவர் என்றும், நாடி வரும் பக்தர்களின் துயர் துடைத்து உடன் போக்குவதால் ஆண்டப்பிள்ளை பைரவர் என்றும் போற்றப்படுகின்றார்.
இங்கு சனீசுவரரும் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றனவாம். ஸ்தல மரம் வன்னி. வன்னி பத்திரத்தால் அருச்சனை, சமித்துகளால் ஹோமம் முதலியன செய்வது விசேடம் எனக் கூறுகின்றனர்.

வன்னிமரம் சாட்சி சொன்ன திருவிளையாடல் இந்தத் தலத்தில் அரங்கேறியதாகவும்
கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக