புதன், 17 ஜூலை, 2013

பொதுவான பைரவர் பரிகாரங்கள்

- 

 

பொதுவான பைரவர் பரிகாரங்கள்

மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்தஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு .


ஞாயிற்றுக்கிழமை : இராகு காலத்தில் ருத்ராபிஷேகம் , வடை மாலைசாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும் . கடன் வாங்கி வட்டியும் ,அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிறுகிழமை இராகு காலத்தில்ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி , புனுகு சாற்றி ,வெண்பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம்கிடைக்கும் . 

திங்கட்கிழமை 
வில்வார்ச்சனை செய்திட சிவனருள்கிட்டும் .திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்விலகும் .




செவ்வாய்க்கிழமை :
 மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்இழந்த பொருளை திரும்பப் பெறலாம் .


புதன்கிழமை : நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும் .



வியாழக்கிழமை : விளக்கேற்றி வந்தால் ஏவல் , பில்லி , சூன்யம் விலகும்.


வெள்ளிக்கிழமை : மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வப்பேறு கிடைக்கும் .


சனிக்கிழமை : சனிபகவானுக்கு குரு பைரவர் . ஆகவே சனிக்கிழமையன்றுஇவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச் சனி , அர்த்தாஷ்டமச் சனிவிலகி நல்லவை நடக்கும் . காலபைரவர் உடலில் பூமியைத்தாங்கும் எட்டுநாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிப்பட்டால்சர்ப்ப தோஷங்கள் நீங்கும் .


ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால்வழிப்பட்டால் நல்லமக்கள் செல்வங்களைப் பெறலாம் . அஷ்டமி திதியில்மற்றும் பிரதி தமிழ்மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம் , சுவாதி ,மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிப்பட்டால்உத்தியோகத்தில் மதிப்பும் , பதவி உயர்வும் கிட்டும் . தொழிலில் லாபம்கிட்டும் .
சனி பிரதோஷத் தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிப்பட்டால்வழக்குகளில் வெற்றிகிட்டும் .



தேய்பிறை
 அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிப்பட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும் . நல்லருள்கிட்டும் . பஞ்ச தீபம் என்பதுஇலுப்பைஎண்ணெய் , விளக்கெண்ணெய் , தேங்காய்எண்ணெய் ,நல்லெண்ணெய் , பசுநெய் ஆகும் . இவற்றை தனித்தனி தீபமாக ஏற்றவேண்டும் . அகல் விளக்கில் ஏற்றலாம் . ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம்ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் .
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொருசெவ்வாய்தோறும் பைரவரைவணங்கி " கால பைரவ அஷ்டகம் " படித்துவந்தால் எதிரிகளை அழித்து , கடன்கள்தீர்த்து , யமபயம் , மட்டுமில்லாதுஎவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம் . 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக