செவ்வாய், 30 டிசம்பர், 2014

எந்திரம் எழுதும் முறை


By Muthukumar ,On December 30,2014


      முதலில் வினாயகப் பெருமானை வழிபடவேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு 6 அங்குல நீளம் 6 அங்குல அகலம் உள்ள செம்பு அல்லது வெள்ளி தகட்டை எடுத்து கொள்ளுங்கள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் ஆதி மூலகடவுளான விநாயகரை முதலில் வழிபடவேண்டும். எனவே கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு விநாயகரை மனதில் எண்ணி
அரி ஓம் திரிபுர சங்கரா விக்னேஸ்வர ரூபாடம் டம் சரணம் நின்னை நான் நம்பினேன்வா வா கணபதி மகா கணபதி என்நாவிலும் வாக்கிலும் வந்து நிற்க சிவா.
நெடுமால் திருமருகா நித்தம் முதலாககொடுமால் வினையறுக்கும் கொன்றே தடுமாறதுஎண் எழுத்து முப்பது வாயும் என் சித்தத்தே நிற்கஉத்தமனே உன் பாதம் பணி
அரி ஓம் சகல குரு பேந்தம் சமஸ்ட குருவேகெங்கா ஆதி குருவே ஜெகநாத குருஆத்ம சுத்தி பஞ்ச பூத தேவர்கள் காக்கஅண்ட பிண்ட சராசரமெல்லாம் என் முன் நிற்க சிவா.
என முறை கூறி மனதில் தியானித்து குரு வணக்கத்தை சொல்லி பின் மூலகணபதியை  வணங்கி தகட்டிற்கு சாம்பிராணி காண்பித்து ஊதுபத்தியை ஏற்றி வைத்துக்கொண்டு தகட்டிற்கு சாப விமோசனம்கொடுக்க வேண்டும்.
ஓம் அகக்தியர் சாபம் நசி நசிஓம் பதினென்சித்தர்கள் சாபம் நசி நசிஒம் தேவர்கள் சாபம் நசி நசிஓம் எவரிட்ட சாபமாயினும் நசி நசிஒம் எந்திர தேவா உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா ஓம் சக்தி நிற்க சிவன் நிற்க சக்தியும் சிவனும் ஒத்து நிற்க சிவா.
- என முறை கூறி சிறிது விபூதியை தகட்டின் மீது போடவும். தகடு சுத்தி ஆகி சாபவிமோசனம் பெறும்.
பேனாவில் உள்ள மை தீர்ந்துபோன லெட்டின் உதவியால் தகட்டில் எழுதலாம் வேறு தங்கம் செம்பு ஊசிகள் கொண்டும் எழுதலாம். ஆனால் தகடு கிழிந்துவிடவும் வாய்ப்பு உண்டு எனவே லெட்தான் உசிதமானது.
ஓம் பால கணபதியே நமஓம் சக்தி கணபதியே நமஓம் த்ருண கணபதியே நமஓம் பக்தி கணபதியே நமஓம் விக்னேஸ்வர ரூபாய நமஓம் மகா கணபதியே நம
என சொல்லவும். ஒவ்வொரு தடவையும் நம என்று சொல்லி முடியும் போது சிறிது விபூதி அல்லது பூ விநாயகர் முன் போடவும். பிறகு குரு வணக்கத்தை 11 முறை சொல்லி தியானித்து பூமியைத் தொட்டு வணங்கவும்.தகடு எழுத ஆரம்பித்து விட்டால் வேறு காரியம் சம்பந்தமாக இடையே எழுந்து போக்க்கூடாது ஒரே முறையில் எழுதி முடிக்கவேண்டும். தீய சிந்தனைகள் இல்லாதவாறு கணபதியின் சிந்தனை ஒன்றிலேயே மனம் ஈடுபட்டு இறுக்க வேண்டும். தகடு கிழிந்து விட்டால் வேறு தகடுதான் எழுதவேண்டும் ஓட்டை விழுந்த தகட்டை ஓடும் நீரில் (ஆறு கடல் வாய்கால்) போட்டு விடவேண்டும்.(எந்த தெய்வீக பொருளானாலும் கழிக்கும் போது ஓடும் நீரில் தான் போடவேண்டும்).
தகடு எழுதியவுடன் சூரிய ஒளியிலோ லைட் வெளிச்சத்திலோ நேராக துக்கிபிடித்து பார்த்தால் ஓட்டை விழுந்திருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் அறியலாம். ஒரு தகட்டில் எந்திரம் எழுதினால் மட்டும் போதாது அதற்கு உயிரூட்டவேண்டும். இதற்க்கு உருவேற்றுதல் என்று பொருள். ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்வது உரு எனப்படும்.


சொற்களுக்கு தனி சக்தி உண்டு நமசிவாய என்று ஒரு தரம் சொன்னால் ஒரு உரு. ஆயிரம் முறை சொன்னால் ஆயிரம் உரு எனப்படும். எனவே நாம் ஒரு தகட்டில் எந்திரம் எழுதி அதில் யந்திரத்திற்குறிய வசிய மை சிறிது தடவி விட்டு அந்த எந்திரத்துக்கு உரிய மந்திரத்தை  சொன்னால் அந்த தகட்டிற்கு உரு ஏறுகிறது. மையின் சிறப்பால் அந்த தேவதை எளிதில் வசம் அடைவதுடன் உருவும் வேகமாக தகட்டால் கிரகிக்கப்படுகிறது. இதுதான் உரு ஏற்றும் முறை ஆனால் இதனை முறையாக விதி முறைகளுடன் செய்யவேண்டும்.   

சனி, 20 செப்டம்பர், 2014

Sri Kaalabairavar Peedam Services


முகப்பு

     ஆண் வசியம்
  • பெண்களிடம் சன்டை
  • மனவியை விட்டு வேறு பெண்ணிடம் தொடர்பு
  • விவாகரத்து செய்த்தல்
  • மனைவி மற்றும் குழந்தைகளிடம் எரிச்சலுடன் இருப்ப்து
  • மனைவி நடத்தையில் சந்தேகம்
  • காதல் பிரச்சனைகள்
  • போன்ற பிரச்சனைகளுக்கு ஆண் வசியம் மூலம் தீர்வு காணலாம்.
         பெண் வசியம்
  • ஆண்களிடம் சன்டை
  • விவாகரத்து செய்த்தல்
  • காதல் பிரச்சனைகள்
  • கனவன் நடத்தையில் சந்தேகம்
  • வீட்டில் அனைவர் பேரிலும் எரிச்சல் கோபம்
  • போன்ற பிரச்சனைகளுக்கு பெண் வசியம் மூலம் தீர்வு காணலாம்.
         சத்ரு வசியம்
  • எதிரிகளின் பொறாமை
  • துன்பம்
  • சண்டை
  • நண்பர்களுக்குள் சண்டை
  • பங்காளி சண்டை
  • போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
         தொழில் வசியம்
  • தொழில் முன்னெற்றம் காண்
  • நல்ல வேலை கிடைக்க
  • தொழில் போட்டிகளை எளிதில் வெல்ல
  • பில்லி
  • சூனியம்
  • ஏவல்
  • மருந்திடு
  • போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
         முக வசியம்
  • வெளியிடத்திற்கு மரியாதையும் மதிப்பும் ஏற்படும்
  • அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும்
  • எதிரிகளின் தொல்லை நீங்கும்
  • எந்த இடத்தில் நுழைந்தலும் நல்ல மதிப்பு கிடைக்கும்
  • Contact Us

    Sri Kaalabairavarpeedam
    38, Vellala street,
    Taramangalam(P.O),
    Salem(D.t)-636502,
    Mobile:8015262015,
    Email:srikaalabairavarpeedam@gmail.com.
    Whatsapp:9994164252
                   

    ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

    ஸ்ரீ மஹா பைரவர்




    ஸ்ரீ மஹா பைரவர் மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள். ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம். சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர்.

    ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள். தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம்.

    மணி,மந்திரம்,ஔஸதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள். சித்தர்கள் பாதையில் இந்த மணி,மந்திரம்,ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி முழுமைபெறாத. அனுகிரகம் வேண்டும்.

    ஒட்டக்கூத்தர் புலவரால் இயற்றப்பட்ட ஒரு மிக மிக பழமையான பாடல் ...

    உரக கங்கணம் தருவன பணமணி
    உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ
    உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி
    உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய
    கரதலம் தரும் தமருக சதிபொதி
    கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு
    கலகலன் கலன்கலன் என வருமொரு
    கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம்.

    ஸ்ரீ மஹா பைரவர் தன் கைகளில் கங்கணமாகக் கட்டி இருக்கிற பாம்பு கக்கும் மாணிக்கக் கற்களால் உலகம் முழுவதும் துயிலெழ வெயிலெழ. உடை தவிர்ந்த தன் இடுப்பினில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்ப, கையில் உள்ள தமருகம் என்னும் உடுக்கை எழுப்பும் தாள ஓசையும்,சிவந்த சிலம்பின் ஒலியும் சேர்ந்து கலன்,கலன் என்னும் இனிய நாதம் உண்டாகுமாம். இப்படி காட்சி தரும் கரிய ஆடை அணிந்த பைரவர் பாதம் பணிந்து வணங்குவோம்.

    ...


    ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்:

    துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
    காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    மாதங்கள் ... துவாதச ஆதித்தியர்கள் ... ஆதித்தியர்களின் பிராண தேவதை

    சித்திரை ... அம்சுமான் ... சண்ட பைரவர்
    வைகாசி ... தாதா ... ருரு பைரவர்
    ஆனி ... ஸவிதா ... உன்மத்த பைரவர்
    ஆடி ... அரியமான் ... கபால பைரவர்
    ஆவணி ... விஸ்வான் ... ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
    புரட்டாசி ... பகன் ... வடுக பைரவர்
    ஐப்பசி ... பர்ஜன்யன் ... ÷க்ஷத்ரபால பைரவர்
    கார்த்திகை ... துவஷ்டா ... பீஷண பைரவர்
    மார்கழி ... மித்திரன் ... அசிதாங்க பைரவர்
    தை ...nவிஷ்ணு ... குரோதன பைரவர்
    மாசி ... வருணன் ... ஸம்ஹார பைரவர்
    பங்குனி ... பூஷா .... சட்டநாத பைரவர்

    சனி, 6 செப்டம்பர், 2014

    அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை


    Posted On Sep 6,2014,by Muthukumar

    அனுமன்அஞ்சனம் உச்சாடனம் மை


    கிழக்காய் நெல்லி

    வெள்ளைச்சாரனை

    ஆமண்குஎண்ணை 

    வைகளை முறைப்படி கப்பு

    இதற்கு பூஜைமுறைகள்

    வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
    ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ
    ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,
    ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க
    பஞ்சமுகி ஹநுமதே நம:

    இந்த மந்திரத்தை தினம் 1008உரு வீதம்நாள்48 உச்சாடனம் செய்யவேண்டும்

    திங்கள், 1 செப்டம்பர், 2014

    நான்கு பைரவர்கள்‬!



    Posted By Muthukumar On Sep 1,2014
    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிசலூர். இங்குள்ள சௌந்தர நாயகி உடனுறை சிவயோகிநாத சுவாமி திருக்கோயில் வெகு பிரசித்தம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் தலம், பைரவர் வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்றதாகத் திகழ்கிறது.
    முற்காலத்தில் ரிஷிகள் (யோகிகள்) எட்டுப் பேர் இங்கு வந்து, கடும் தவம் புரிந்தனராம். அதன் பலனாக, இறை தரிசனம் கிடைக்கப் பெற்ற ரிஷிகள் இறுதியில் லிங்கத் திருமேனியிலேயே ஐக்கியமானார்களாம். எனவே, இங்குள்ள இறை வனுக்கு, 'சிவயோகி நாதர்' என்று திருநாமம்.
    தவிர, புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், யோக நந்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இன்றும், லிங்கத் திருமேனி(பாணம்)யில் ரிஷிகளின் சடைகள் காணப்படுகின்றனவாம்! அம்பாளின் பெயர்- சௌந்தர நாயகி.
    ஒரு முறை, தன் மனைவியுடன் இங்கு வந்த ராஜராஜ சோழன், பிள்ளை வரம் வேண்டி தங்கத்தால் ஆன பசுவை தானம் அளித்து வழிபட்டதாகவும், சிவனருளால் அவருக்கு ராஜேந்திர சோழன் பிறந்ததாகவும் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் மதில் சுவரில் உள்ள சூரிய கடிகாரம், சோழர்களது கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டு!
    இங்குள்ள இறைவனை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இங்குள்ள நந்தி தேவர் தனி சிறப்பம்சத்துடன் திகழ்கிறார். முற்காலத்தில், கொடிய பாவங்கள் செய்து வாழ்ந்து வந்த ஒருவன், இறக்கும் தறுவாயில் மனம் திருந்தி இங்கு வந்து, 'சிவயோகிநாதா... என்னைக் காப்பாற்று!' என்று அபயக் குரல் எழுப்பினானாம். அதைச் செவியுற்ற இறைவன், 'அபயக் குரல் எழுப்பியது யார்?' என்று பார்க்கும்படி நந்தியை பணித்தார். அதன்படி தலையைத் திருப்பிப் பார்த்த நந்திதேவர், குரல் எழுப்பியது யாரென்று இறையனாருக்குச் சொல்ல... இறைவன், அந்த பாவிக்கு காட்சியளித்து அருள் புரிந்தார் என்கிறது தல புராணம். எனவே, இங்குள்ள நந்தியம்பெருமானின் முகம் இறைவனை நோக்காமல், வேறொரு திசையை நோக்கித் திரும்பிய வண்ணம் காட்சி தருகிறது. நந்தியின் மூலமாக இறைவன் அருள் புரிந்ததால் இந்தத் தலம், ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தைச் சேர்ந்த பக்தர்களது குறை தீர்க்கும் தலமாகவும் திகழ்கிறது.
    இந்தக் கோயிலில் ஒரே வரிசையில் காட்சி தரும் நான்கு பைரவர்களை 'சதுர்கால பைரவர்கள்' என்பர். முற்காலத்தில், மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகளாகக் கருதப்பட்டது. இதை நான்காகப் பிரித்து, சதுர்கால பைரவர்கள் நால்வரையும் ஒவ்வொரு கால கட்டத்துக்கும் உரியவர்களாகக் கருதி வழிபடுவர்.
    ஞான பைரவர் முதல் 30 ஆண்டுகள், ஞானம் பெறு வதே மனிதனின் குறிக்கோள். அந்த ஞானத்தை அருள்பவர் ஞான பைரவர். இவரை வழிபட்டால் கல்வி, வேலை மற்றும் இனிய வாழ்க்கை அமையும்.
    சுவர்ணாகர்ஷன பைரவர் வாழ்வின் 2-வது கட்டத்துக்கு (31 முதல் 60 வயது வரை) உரியவர் இவர். மகாலட்சுமியின் சந்நிதிக்கு எதிரில் திருவாசி யுடன் காட்சி தரும் இந்த பைரவர், தம்மை வழிபடுவோருக்கு செல்வகடாட்சம், வியாபார அபிவிருத்தி, குடும்பத்தில் நன்மை ஆகிய பலன்களையும் அருள்கிறார்.
    உன்மத்த பைரவர் இவர், வாழ்வின் 3-வது கட்டத்துக்கு (61 முதல் 90 வயது வரை) உரியவர். இவரை வழிபட்டால் நோய்கள், சத்ரு பயம், திருஷ்டி பயம், கடன் தொல்லை ஆகியவற்றுடன் சனி தோஷங்களும் நீங்கும்.
    ஒரு முறை, சூரியனின் மகனான சனீஸ்வரன் பெரும் அவமதிப்புக்கு ஆளானார். பிறகு, தன் தாய் சாயாதேவி யின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு, நவக்கிரக பதவியைப் பெற்றாராம். ஆகவே, பைரவரை சனீஸ்வரரது குருவாகக் கருதுவர். சனீஸ் வரர் இங்கு, வெண்ணிற ஆடையுடன் பால சனீஸ்வர ராக பைரவர்களின் அருகிலேயே காட்சி தருகிறார்.
    யோக பைரவர் மனித வாழ்வின் கடைசி 30 ஆண்டு களுக்கு உரிய இவர், சகல யோகங்களையும் தருபவர். இவருக்கு அருகில் உத்திர கயிலாய லிங்கம் உள்ளது. எனவே இவரை வணங்கினால், கயிலாயப் பதவி கிட்டும் என்பது நம்பிக்கை.
    வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்கள் பைரவருக்கு உகந்தவை. தவிர இங்கு, ஞாயிற்றுக் கிழமைதோறும் ராகு காலத் தில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இந்த நாட்களில் இங்கு வந்து,
    அதிக்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம
    பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி
    - என்ற கால பைரவர் துதி சொல்லி, சதுர் கால பைரவர்களை வழிபட, சகல நலன்களை யும் பெறலாம்.
    சமீபத்தில் இந்தக் கோயிலில், 64 பைரவர்களுக் கும் தனித்தனியே குண்டங்கள் அமைத்து, 'சதுர் சஷ்டி பைரவ மகா யாகம்' நடைபெற்றது. உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த யாகத்துக்கு முந்தைய தினமும், யாகம் முடிந்த பிறகும் பெரு மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது!

    சனி, 19 ஏப்ரல், 2014

    பயம் நீக்கும் பைரவர்‬!



    By Muthukumar On Apr 19
    வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களால் ஏற்படும் பயம் நீங்க, ஸ்ரீபைரவரை வழிபட வேண்டும். சீர்காழி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீசட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் அருளும் ஸ்ரீஅகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்பார்கள்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும்.
    காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர், பாதாள பைரவர். கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்னதாக இந்த பைரவர்களை வழிபட, பணிகள் தடையின்றித் தொடரும் என்பது நம்பிக்கை.
    பழநி மலை அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளியுள்ளார். இவர் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மூர்த்தி ஆவார்.
    சேலம் சிருங்கேரி சங்கர மடத்தில் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளால் யந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சந்நிதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக அருளும் இவர் சாந்நித்தியம் மிகுந்தவர். மேலும், இங்குள்ள ஸ்ரீகாசிவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீகால பைரவரைத் தரிசித்து வழிபடுவதும் விசேஷம்!
    சென்னை- திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழு பைரவர் சந்நிதிகள் உள்ளன.
    தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சாற்றி, மனதார வழிபட, தீயசக்திகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்; சத்ரு பயம் அகலும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.