புதன், 17 ஜூலை, 2013

கால பைரவர் கோவில் தருமபுரி,அதியமான் கோட்டை

Posted On July 17,2013,By Kumaran,

வழிபாடு (பூஜை முறை) 
  • தின பூஜை இராகு காலத்தில் மட்டும் தான் நடக்கும்.
  • விஷேச பூஜை ஞாயிற்று கிழமை இராகு காலத்தில் மாலை 4.30 முதல் 6.00 வரை 28 வகையான அபிஷேகம், ருத்ர அபிஷேகம் இங்கு நடக்கும். அன்று இராஜ அலங்காரத்தில் இவர் காட்சியளிப்பார்
  • வார அபிஷேகம் உண்டு.
  • நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சுவாமி பூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 13 ஞாயிற்று கிழமை, 3 அஷ்டமி, 3 நவமி தினங்களில் இவ்வழிமுறையினை கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

அபிஷேகம் வாரம்
  • மாதம் ஒரு முறை தேய்பிறை அஷ்டமியில் நடக்கும். காலை 6 மணிக்கு அதிருத்ர யாகம், அஷ்ட பைரவ யாகம், சோலச கணபதி யாகம், சோட லக்ஷ்மி யாகம் இவையனைத்தும் 6 மணி முதல் 9 மணி வரை நடக்கும்.
  • 9.30 மணிக்கு மேல் 64 வகையான திரவிகளால் அபிஷேகம் நடக்கும்.
  • உபசார பூஜைகள் நடக்கும்.
  • இரவு 11மணிக்கு சத்ரு சம்ஹார ஓமம், குருதி பூஜைகள் நடக்கும். இதில் 500 கிலோ மிளகாய் 8 பந்தம் வைத்து பூஜைகள் நடக்கும். இப்பூஜையில் மிளகாயை ஓமத்தில் போடும்போது சிறிதும் நெடி வருவதில்லை.
  • பூஜையில் எதிரிகள் விலகுவார்கள்.

பைரவர் பூஜை
  • ஆதிசங்கபய்ரவர், குரோத, கபால, சம்கார, உன்மந்த, சண்ட, உக்கிர என 8 வகையான பைரவர்கள் உள்ளனர்.
  • ஓவ்வொரு பைரவருக்கும் 8 அவதாரங்கள் உள்ளது. மொத்தம் 64 பைரவர்களுக்கும் பூஜை நடக்கும்.
  • பில்லி, சூனியம், ஏவல், பிசாசு கெட்ட கிரகங்கள் தொல்லை போன்றவை தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டவுடன் விலகி விடும்.
  • அம்மாவசை அன்று கண் திருஷ்டி, ஓமல் விலக பூசனிக்காய் உடைப்பார்கள்.
  • அஷ்டமியில் மட்டும் 20,000 பேரும் ஞாயிற்று கிழமைகளில் 5,000 பேரும் இக்கோவிலுக்கு வருவார்கள்.
  • பௌர்ணமிக்கு சொர்ண கிருஷ்ணா குபேர பூஜைகள் பண பிரச்சனைகள் தீர நடக்கும்.

சிறப்பு பூஜைகளுக்கும்
  • முன்னோர்கள் சாபம், பித்துரு சாபம், ஸ்ரீ சாபம், நவகிரக தோஷம், ஜாதக தோஷம் ஆகியவற்றிற்க்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.
  • 12 ஞாயிறு பூஜை, 3 தேய்பிறை அஷ்டமி தொடர்ந்து தீPபம் ஏற்றி வழிபட்டால் மூன்று மாதத்தில் அவர்கள் நினைத்தது நடக்கும்.
  • குரு, பிரம்மா, விஷ்ணு இவர்கள் மூவரின் செயல்களும் இவர் உதவியால்தான் நடக்கும்
  • கர்நாடக, ஆந்திரா மாநிலத்தவர்கள் இங்கு அதிகமாக வருகின்றனர். மேலும் சில பக்தர்கள் மலேசியவில் இருந்தும் வருகை தருகின்றனர்.

அட்டவணை
Table 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக